இன்று திரையரங்குகளில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது சூரி நடிப்பில் உருவான “மாமன்” திரைப்படம். கிராமிய பின்னணியை மையமாகக் கொண்டு, பாசம், காதல், பிரித்துவைக்கும் சூழ்நிலைகள் என உணர்வுகளை ஊட்டும் விதமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் வெளியாகியுள்ள இந்நாளில், சூரி பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பு மிகுந்த உணர்வுகளை தூண்டிய ஒன்றாக அமைந்துள்ளது.
பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சூரி பேசும்போது, ஒரு உணர்ச்சிபூர்வமான சம்பவத்தையும் பகிர்ந்து கொண்டார். “மாமன்” படம் நன்றாக ஓட வேண்டும் என்ற ஆசையில், சில ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டதைக் குறித்து அவர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
அதன்போது சூரி, "என்னப்பா பண்ணி வச்சிருக்கீங்க..! இது ரொம்ப முட்டாள் தனம். என் தம்பிங்கலா இருக்க உங்களுக்கு தகுதியே இல்ல. மண் சோறு சாப்பிட்டா படம் ஓடிடுமா என்ன..?இப்படியெல்லாம் யாரும் இனிமேல் செய்யவேண்டாம்!" என்று கோபமாகக் கூறியிருந்தார்.
“மாமன்” திரைப்படம் சூரிக்கு ஒரு முக்கியமான படமாகவே பார்க்கப்படுகின்றது. இதில் அவர் ஒரு நேர்மையான நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி ஒரு படத்தில் நடிகராக அவர் எடுத்த முயற்சி, ரசிகர்களின் மனதை சிறப்பாகக் கவர்ந்துள்ளது.
சினிமா என்பது மக்களை மகிழ்விப்பதற்காக உருவாகும் கலை. ஆனால் ரசிகர்கள் அதில் தனிப்பட்ட பாசத்தை தவறாக புரிந்து கொண்டு தவறான காரியங்களைச் செய்வது மிகவும் வேதனையை அளிக்கின்றது எனவும் சூரி கூறியுள்ளார்.
Listen News!