• May 17 2025

"அவரோட வார்த்தை கடைசியில் பலிச்சது..!" நடிகர் சந்தானம் பேச்சு..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் சந்தானம் இவர் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தற்போது வெளியாகிய மதகஜராஜா படத்தின் பின்னர் ரசிகர்கள் இவரை தொடர்ந்து காமெடி நடிகராக நடிப்பதற்கு கேட்டு வருகின்றனர்.


இதற்கு சம்மதம் தெரிவித்த இவர் அடுத்து சிம்புவின் 50 ஆவது படத்தில் காமெடி நடிகராக நடிக்க உள்ளார். இந்த நிலையில் சமீபத்தைய பேட்டி ஒன்றில் மதகஜராஜா படத்தில் நடித்தது குறித்து மிகவும் அழகாக பேசியுள்ளார்.


அதில் அவர் "மதகஜராஜா' படம் வரப்போகுதுன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் பயமா இருந்தது. ஏன்னா, 12 வருஷத்துக்கு முன்னாடி பண்ண காமெடி இப்போ ஒர்க் அவுட் ஆகுமான்னு தோணுச்சு. ஆனா, அது ஒர்க் அவுட் ஆச்சு. அந்த படம் பண்ணும் போது சுந்தர்.சி சார் என்னிடம், 'சந்தானம் சார், உங்க நேரம் ரொம்ப உச்சத்துல இருக்கு. நீங்க தொட்டது எல்லாம் துலங்குது. அதனால, மதகஜராஜா படத்திலும் உங்க போர்ஷன் ஹிட் ஆகும்' என்றார். அந்த வார்த்தை கடைசியில் பலிச்சது." என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement