• May 28 2026

துயரத்திற்கு நடுவே நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட முத்துக்காளை.. மனதை உருக்கும் காணொளி

shali / 3 days ago

Advertisement

Listen News!

நடிகர் முத்துக்காளை சமீபத்தில் தனது குடும்பத்தில் ஏற்பட்ட துயர சம்பவம் குறித்து மனம் திறந்து உருக்கமாக பேசியுள்ள வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.

இவரது மனைவி திடீரென ஏற்பட்ட மூளை ரத்தக் கசிவு காரணமாக அவர் உயிரிழந்தது மிகப்பெரிய துயரமாக அமைந்ததாக தெரிவித்துள்ளார். அதாவது, “என் மனைவியை காப்பாற்ற உதவி செய்யணும்” என அவர் முதலமைச்சரிடம் நேரடியாக கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


அந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசு தரப்பில் வழங்கப்பட்ட உதவிகள், மருத்துவமனை ஏற்பாடுகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு குறித்து அவர் நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக முதலமைச்சருக்கும், அமைச்சர்கள் ராஜ் மோகன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கும் தனது மனமார்ந்த நன்றியை அவர் வெளிப்படுத்தியுள்ளார். 

இருந்தபோதிலும், அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தனது மனைவியை காப்பாற்ற முடியாமல் போனது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேசும் அவரது வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். குடும்ப இழப்பின் வலி எவ்வளவு பெரியது என்பதை அவரது வார்த்தைகள் வெளிப்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement