தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விஜய் சேதுபதி திகழ்ந்து வருகின்றார். மக்கள் செல்வன் என அழைக்கப்படும் இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் வில்லன் கேரக்டரிலும் மிரட்டி வருகிறார். சினிமாவில் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி தனக்கேற்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.
விஜய் சேதுபதி நல்ல விஷயங்கள் பண்ணக்கூடியவர்களை தட்டிக் கொடுப்பதோடு மட்டுமில்லாமல் கண்டன்ட் கிரியேட் பண்ணக்கூடிய திறமையாளர்களை எப்பவுமே பாராட்டவும் செய்வார்.
இந்த நிலையில், சிராஜ், அருண் என்ற இரண்டு இளைஞர்களும் கடந்த சில வருடங்களாக இந்தியா முழுக்க பல இடங்களில் ட்ரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு இயற்கை சார்ந்த விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதியின் வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்துள்ளதோடு அவருக்கு 2002வது மரக்கன்றுகளையும் கொடுத்துள்ளார்கள். அந்த நேரத்தில் விஜய் சேதுபதி பணம் கொடுக்க முற்பட, குறித்த இளைஞர்கள் அவரிடம் எங்களுக்கு சினிமா தான் கனவு அதற்கு உதவி செய்யுமாறு கூறியுள்ளனர்.
இதனை கேட்ட விஜய் சேதுபதி, நீங்க ஃபிலிம் இன்ஸ்டிட்ல படிக்கணுமா? நான் உங்களை சேர்த்து படிக்க வைக்கிறேன். இல்ல வேற என்ன உதவினாலும் கேளுங்கடா தம்பி.. நான் பண்றேன் அப்படின்னு உரிமையாக சொல்லியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும் குறித்த இளைஞர்களின் வீடியோ எல்லாம் பார்த்ததாகவும் நல்லா பண்ணுறீங்க என்று மனசார பாராட்டி அன்பால அனைத்து முத்தமும் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. தற்போது விஜய் சேதுபதியின் இந்த மனசு பலராலும் பாராட்டப்பட்டு பகிரப்பட்டு வருகின்றது. இதோ அந்த வீடியோ..
Listen News!