• Apr 16 2026

வனிதா வீட்டில் நடந்த பிரம்மாண்ட கல்யாணம்! பிக் பாஸ் பிரபலங்களும் பங்கேற்பு

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜயக்குமாரின் மகளான வனிதா, ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வந்தார். நடிகர் விஜய்க்கு கூட ஜோடியாக நடித்துள்ள வனிதாவை மக்கள் மத்தியில் பேமஸ் ஆக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட வனிதா, அந்த சீசனில் கொளுத்திப்போட்டு சண்டையை உருவாக்குவதில் கில்லாடியாக இருந்து வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வனிதாவுக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. அதேபோல் கடந்த 2020-ம் ஆண்டு லாக்டவுன் சமயத்தில் பீட்டர்பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார் வனிதா. 


இவர்களது திருமண வாழ்க்கை ஓராண்டு கூட நீடிக்கவில்லை. திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே பீட்டர்பால் குடித்துவிட்டு தகராறு செய்ததால், அவரை துரத்திவிட்டார் வனிதா.

இதை தொடர்ந்து பிக் பாஸ் 7 இல் வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா, பங்கு பற்றி இருந்தார். அண்மையில் பிக் பாஸ் சீசன் 7 பிரபலங்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்து இருந்தார்.

இந்த நிலையில், பேமிலி வெட்டிங் என்று வனிதா புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், பிக் பாஸ் பூர்ணிமா, நிக்சன் என இந்த சீசனில் பங்குபற்றிய சில பிரபலங்கள் உள்ளனர்.


Advertisement

Advertisement