• Apr 16 2026

முற்றிலும் மாறுபட்ட Bigg Boss saving order.. முதலிடத்திற்கு முன்னேறிய தினேஷ்! டேஞ்சர் சோனில் சிக்கிய முக்கிய போட்டியாளர்! பறிபோனது அர்ச்சனாவின் கனவு?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. 

அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 


இந்த நிலையில், இன்றைய தினம் வெளியான பிக் பாஸ் போட்டியாளர்களின் சேவ் மற்றும் டேஞ்சர் சோனில் உள்ள போட்டியாளர்களின் விபரம் தொடர்பில் முற்றிலும் மாறுப்பட்ட தகவல் வெளியாகி அதிர்ச்சி கொடுத்துள்ளது.

அதன்படி, முதலில் சேவ் பண்ணப்பட்ட போட்டியாளராக தினேஷ் முன்னேறி உள்ளதோடு, அடுத்த நிலையில், மாயா, மணியும், நான்காவது இடத்தில் அர்ச்சனாவும் காணப்படுகின்றனர்.

இறுதியாக டேஞ்சர் சோனில் காணப்பட்ட விஷ்ணு, விஜய் வர்மாவில் இறுதியாக விஜய் வர்மா வெளியேற விஷ்ணு டேஞ்சர் சோனில் காணப்படுகிறார்.

இவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சியின் பைனலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், தற்போது குறித்த போட்டியாளர்களின் நிலையில் மாற்றம் நிகழ்ந்துள்ளமை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement