• Jan 19 2025

தனுஷை கண்டபடி திட்டினாரா இளையராஜா? இழுபறியில் இளையராஜாவின் பயோபிக்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ளவர் தான் இசைஞானி இளையராஜா. இவரது மெட்டுக்களுக்கு மயங்காத ரசிகர்களே இருக்க மாட்டார்கள். அந்த காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை இளையராஜாவின்  இசைக்கு தனி முக்கியத்துவம் காணப்படுகிறது.

தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பலமொழிகளில் ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்து  உள்ளார். தனது சிறு வயது வாழ்க்கை வரலாற்றை அவரே புத்தகமாக எழுதியுள்ளார். இதன் காரணத்தினால் இளையராஜாவின் வாழ்க்கை படமாக்கப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தார்கள்.

இதை தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்ற தகவல் அதிகார்வ பூர்வமாக வெளியானது. இந்த படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருள் மாதேஸ்வரன் இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இதை தொடர்ந்து இளையராஜாவின் கேரக்டரில் நடிப்பதால் அவரைப் போலவே நடை, உடை, பாவனை, அவருடைய பேச்சு எல்லாவற்றையும் அவருடன் இருந்தும், அவருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரது கடந்த கால வாழ்க்கையில் நடந்த, சிறு வயதில் இருந்து ஞாபகம் வரும் விஷயங்களை எல்லாம் சேகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது.


இந்த நிலையில், இந்த படம் தொடர்ந்து இழுபறியாக இருக்க தனுஷுக்கும் இளையராஜாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இளையராஜா தனுஷை திட்டி விட்டதாகவும் தகவல் வெளியானது. இதனால் தான் இந்த படத்தின் அப்டேட் வெளியாவதில் தாமதம் நிலவுகின்றது எனவும் கூறப்பட்டது.

ஆனாலும் இளையராஜா தன்னை திட்டினாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் தனுஷ். அவர் தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருவதால் இளையராஜாவின் பயோபிக் படம் ஆரம்பிக்க தாமதமாகி வருகின்றது என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement