• Jan 19 2025

"மனம் நிறைந்தது.. ஆனால் விரல் உடைந்தது'' KPY பாலாக்கு திடீரென என்னாச்சு..! அதிர்ச்சியளிக்கும் போட்டோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் KPY பாலா.

இவர் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமை மூலம் பேசப்பட்டவர்.

டிவி மட்டுமின்றி youtube சேனல் நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள், கோவில் திருவிழாக்கள் என அவர் வேறு பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.


சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும், விஜய் சேதுபதியின் ஜூங்கா, தும்பா, Friendship போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது பாலா தனது விரல்கள் உடைந்து விட்டன.. என கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

மேலும், "மனம் நிறைந்தது.... விரல் உடைந்தது.... நன்றி" என போட்டோவுடன் பதிவிட்டுள்ளார். 

அண்மையில், சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னிடம் இருந்த 2 லட்சம் ருபாய் பணத்தை எடுத்து அவர் 200 குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்தார். அதை பலரும் பாராட்டினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement