• Jan 19 2025

குடும்பம், குழந்தைகள் எல்லாத்தையும் மொத்தமா மறந்திட்டு போ..! ஜோதிகாவுக்கு ரூல்ஸ் போட்ட சிவகுமார்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை ஜோதிகா. இவர் தல , தளபதி , சூப்பர்ஸ்டார் கமலகாசன்  என டாப் ஹீரோக்களுடன் தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். காக்க காக்க திரைப்படத்தின் போது சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா 2015ல் ரீ-எண்ட்ரி கொடுத்தார். அதன்பின் தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த  கதை களத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.


இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சினிமாவில் நடிக்கக் கூடாது என மாமா சிவகுமார் உங்களை தடுத்தாரா என்கிற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், அந்த வீட்டில் தனக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருந்ததே என் அப்பா சிவகுமார் தான். ஷூட்டிங்கின் போது குடும்பம், குழந்தைகள் என அனைத்தையும் மறந்து விட்டு வேலை இடத்தில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும் என்றார்.

மம்மூட்டியுடன் நடித்த காதல் படத்தை பிரத்யேகமாக தனது நண்பர்களுக்கு போட்டுக் காட்டி ரசித்துப் பார்த்து பாராட்டினார். இவ்வாறு எனக்கு சப்போர்ட்டாக இருப்பதே என்னுடைய மாமா தான் என்று பொய்யாக பரவிய வதந்திக்கு பதிலடி கொடுத்தார் .

Advertisement

Advertisement