• Sep 21 2023

தலை சுற்ற வைக்கும் ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- இத்தனை கோடியா?

stella / 5 days ago

Advertisement

Listen News!

53வயதிலும்  ரசிகர்கள் மத்தியில் மாஸ் காட்டிவரும் ஸ்டைலும், அழகும் கொண்டவர்தான் ரம்யா கிருஷ்ணன் இவர்  53 வயதிலும்  இவர் இளம் நடிகையைப் போல்  இளமை குறையாத கம்பீரமான அழகுடன் தான் இருக்கிறார்.

இதுவே அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் தேடி வர செய்து விடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன் இப்போது தெலுங்கு டாப் ஹீரோ மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் படத்தில் நடித்து வருகிறார்


இப்படி பிசியாக இருக்கும் இவர் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் வகையில் ஒரு படத்திற்கு 4 முதல் 5 கோடி வரை சம்பளமாக பெறுகிறாராம். அதிலும் பல போல்டானா கதாபாத்திரங்களில் இவர் தான் நடிக்க வேண்டும் என்று வாய்ப்புகளும் வரிசை கட்டி நிற்கின்றது.

ஏற்கனவே நீலாம்பரி மூலம் கெத்து காட்டிய இவர் ராஜமாதாவாக அலறவிட்டார். இப்போதும் கூட இவரை பல சமயங்களில் இந்த பெயர்களை வைத்து தான் அழைத்து வருகிறோம். 


இப்படி கஷ்டப்பட்டு நடித்து இவர் சேர்த்திருக்கும் சொத்தின் மதிப்பு மட்டுமே 98 கோடியாக இருக்கிறது. அதில் சென்னையில் மட்டுமே இவருக்கு மூன்று முக்கிய பகுதிகளில் ஆடம்பர பங்களா இருக்கிறது. அதேபோன்று ஹைதராபாத்திலும் சொகுசு வீடு இருக்கிறது.


மேலும் விலை உயர்ந்த கார், நிலங்கள் என இவர் பல சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார். மேலும் சின்ன திரையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் ஒரு எபிசோடுக்கு 10 லட்சம் வரை வாங்குகிறாராம் என்றும் கூறப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement