• Jan 18 2025

மலேசியாவுக்கு டிக்கெட் போட்ட விஜயா.? அண்ணாமலை போட்ட கண்டிஷனால் சிக்கிய ரோகிணி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், அண்ணாமலை விஜயாவிடம் உன்னாலதான் முத்துவும் மீனாவும் நஷ்டப்பட்டு போயிருக்காங்க. அதனால அந்த ஐந்து லட்சம் ரூபாவை நீ தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லுகின்றார். அதற்கு நான் எப்படி கொடுப்பது என விஜயா மறுப்பு தெரிவிக்கின்றார்.

அப்படி என்றால் நான் வேலைக்கு போய் அந்த பணத்தை கொடுக்கின்றேன் என்று அண்ணாமலை சொல்லுகின்றார். இதனால் விஜயா அதிர்ச்சி அடைகின்றார். மேலும் முத்துவும் மீனாவும் எங்களுக்கு பணம் வேண்டாம் என்று சொல்லுகின்றார்கள். ஆனாலும் இல்லை பணத்தை கொடுத்து தான் ஆக வேண்டும் என்று அண்ணாமலை சொல்லிவிட்டு செல்லுகின்றார்.

இதனால் மனோஜிடம் சென்ற விஜயா தனக்கு காசு தருமாறு கேட்கின்றார். இந்த பூ கட்டுறவகிட்ட நான் கடன் படனுமா என்று கேட்க, தன்னிடம் இப்போதைக்கு காசு இல்லை என்று மனோஜ் சொல்லிவிடுகிறார். இதனால் ரோகிணியிடம் மலேசியா மாமாவுக்கு போன் பண்ணி காசு கேக்குமாறு விஜயா  சொல்லுகின்றார். மலேசியா மாமா போன் எடுக்கவில்லை என்று ரோகினி சமாளிக்கின்றார்.

d_i_a

இதை தொடர்ந்து மலேசியாவுக்கு டிக்கெட் போடுங்கள் அங்கு போய் சம்மந்தியை பார்த்துவிட்டு காசை வாங்கிட்டு வருவோம் என்று விஜயா சொல்ல, ரோகிணி அதிர்ச்சி அடைகின்றார். அவர் ஜெயிலில் இருப்பதால் அவரை பார்ப்பதற்கு மூன்று மாதம் ஆகும். இப்போது நாங்கள் போனால் எங்களையும் ஜெயிலில் பிடித்து போட்டு விடுவார்கள் என்று பயம் காட்டுகின்றார். இதனால் தான் மூன்று லட்சம் ரூபாய் ரெடி பண்ணுவதாக விஜயாவுக்கு வாக்கு கொடுக்கின்றார்.

அதன் பின்பு மனோஜிடம் ஜீவா தந்த பணத்தில் 3 லட்சம் எடுத்து  தருமாறு சொல்ல, அந்த பணம் ஒன்றுமில்லை. எல்லாம் பிசினஸ்ல போட்டாச்சு என்று சொல்லுகிறார். இதனால் தனது நகையை வைத்து பணத்தை கொடுக்கின்றேன். பிறகு அதனை எடுத்து தா என்று மனோஜுக்கு சொல்லுகிறார்.


இன்னொரு பக்கம் மீனாவும் முத்துவும் செருப்பு தைக்கும் பெரியவர்களுக்கு திருமண நாளை கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு மாலை வாங்கி கொடுத்து அயலில் உள்ளவர்களுக்கு ஸ்வீட் கொடுத்து கொண்டாடுகின்றார்கள். இதை பார்த்து அவர்கள் கண் கலங்குகின்றனர்.

இறுதியாக வீட்டில் நடந்த பிரச்சனையை வித்யாவிடம் ரோகிணி சொல்ல, பார்த்தியா கர்மா ஒரு பூமர். உனக்கே திருப்பி அடிச்சுடுச்சு என்று வித்யா சொல்லுகிறார். மேலும் தான் ஒரு கணக்கு போட்டால் நடந்தது வேற ஒன்றாக இருக்கின்றது. விஜயா அப்படியே பிளேட்டை மாற்றிவிட்டார் என்று புலம்புகின்றார். அதன் பின்பு பார்வதி வீட்டுக்கு செல்லுகின்றார் ரோகிணி. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement