• Jan 19 2025

திடீர் என்று பண்ணினதால் தான் சொல்ல முடில,- இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் பசுபதி

stella / 1 year ago

Advertisement

Listen News!


சின்னத்திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு வந்தவர் நடிகை காஜல் பசுபதி. இவர் சன் மியூஸிக், கலைஞர் தொலைக்காட்சி என பல தொலைக்காட்சி சேனல்களிலும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கடைசியாக கடந்த 2002ம் ஆண்டு வெளியான ‘கலகலப்பு 2’ படத்தில் நடித்தார்.

அதன் பிறகு, மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அதன் கோரியோகிராஃபரான சாண்டியை காதலித்து திருமணம் செய்தார். ஆனால், அடுத்த சில ஆண்டுகளிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துக்கொண்டனர்.


இதனை அடுத்து இருவரும் கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக காஜல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்வமாக இருப்பதோடு திரைப்படங்களிலும் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் இவர் தற்பொழுது ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அதில்,தனக்கு இரண்டாவது திருமணம் நடந்து விட்டதாகவும் திடீரென முடிவு பண்ணியதால் யாருக்கும் சொல்ல முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement