• Jan 18 2025

கங்குவா பட ப்ரோமோஷனில் சூர்யாவின் உயரத்தை இழுத்துப் பேசிய பாபி தியோல்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்காக தற்போது பட ப்ரோமோஷன் பணிகளில் பட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

கங்குவா படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் சிவா, அதன் பின்பு ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்தே படத்தை இயக்கினார். தற்போது சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், கங்குவா படத்தின் பட ப்ரோமோஷன் பணிகளின் போது நடிகர் பாபி தியோல் சூர்யாவின் உயரம் குறித்து பேசி உள்ளார். தற்போது குறித்த தகவல் தீயாக பரவி வருகின்றன.


 அதாவது சூர்யா எப்படிப்பட்ட நடிகர் என்றால் அவரது உயரத்தைப் பற்றி அவர் கவலைப்பட அவசியமே இல்லை. ஏனென்றால் அவரது நடிப்பால் மற்றவர்களை விட மிக உயரமாக காணப்படுகின்றார். அவரது நடிப்பு என்னை வியக்க வைத்தது. அவர் தனது அனைத்து ஸ்டண்ட் காட்சிகளையும் தானே செய்கின்றார். உண்மையிலே சூர்யா வலிமையான நபர் என பாராட்டியுள்ளார்.

Advertisement

Advertisement