• May 09 2025

புஷ்பா3 குறித்து ரசிகர்களுக்கு கிடைத்த ஷாக்கான அப்டேட்..! அல்லு அர்ஜுனின் அதிரடி முடிவு..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் பல சாதனைகளை எட்டிய படம் தான் புஷ்பா. முன்னர் வெளியான புஷ்பா 1 மற்றும் 2 ஆகிய திரைப்படத்தின் வெளியீட்டின் போது மக்கள் வழங்கிய ஆதரவினைத் தொடர்ந்து தற்போது புஷ்பா 3 பற்றிய ஒரு சூப்பரான அப்டேட் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2021ல் வெளியான புஷ்பா திரைப்படம், தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடத்திலும் வெளியாகியிருந்தது. படம் வெளியாகியவுடனே அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அல்லு அர்ஜுனின் மாஸ் நடிப்பு, ராஷ்மிகாவின் கவர்ச்சியான தோற்றம் மற்றும் இயக்குநர் சுகுமார் கொண்டுவந்த அழுத்தமான திரைக்கதை இவை எல்லாம் சேர்ந்து புஷ்பா படத்தை ஹிட் படமாக மாற்றியிருந்தது.


இப்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, புஷ்பா 3 திரைப்படம் 2028ம் ஆண்டு ஷூட்டிங் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. ஏனெனில் அல்லு அர்ஜுன் தற்போது இரண்டு பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்து வருவதனால் புஷ்பா 3 படத்தில் 2028ல் நடிக்கவிருப்பதாகக் கூறியுள்ளார்.

புஷ்பா 3, 2028ல் படப்பிடிப்பு தொடங்கினாலும், அதனை முழுமையாகத் தயார் செய்து திரைக்கு கொண்டுவர 2030ம் ஆண்டாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவல் ரசிகர்களுக்கு சோகத்துடன் சேர்ந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement