• May 10 2024

ஆள் அடையாளமே தெரியாதளவிற்கு மெலிந்து போன அஜித்... எப்பிடி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அடுத்தாக உருவாகவுள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடித்து வருகின்றார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.


இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த மே மாதமே ரிலீஸ் ஆன போதும் இன்னும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படாமால் உள்ளது. தொடர்ந்து ஷூட்டிங் தள்ளிப்போட்டு வந்த படக்குழு தற்போது ஒரு வழியாக படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அந்தவகையில் வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

ஆக்ஸ்ட் மாதம் தொடங்கி மூன்றே மாதங்களில் இப்படத்தின் உடைய முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளார் மகிழ் திருமேனி. ஏனெனில் வருகிற நவம்பர் மாதம் அஜித் தன்னுடைய இரண்டாம் கட்ட உலக பைக் சுற்றுலாவை தொடங்க இருப்பதால் அதற்குள் இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட பிளான் செய்துள்ளனர். 


மேலும் இப்படத்திற்காக நடிகர் அஜித் 10 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இந்நிலையில் தற்போது லேட்டஸ்ட்டாக விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட அஜித்தின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் "நம்ம தல இந்தளவிற்கு மெலிந்து விட்டாரே" எனக்கூறி வருகின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement