மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி படம் ஆக்சன் நிறைந்த விறுவிறுப்பான கதை களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.
வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித், திரிஷா, அர்ஜுன் கூட்டணியில் விடாமுயற்சி படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளதோடு இதற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.
d_i_a
இன்னொரு பக்கம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்திலும் அஜித் குமார் பிஸியாக நடித்து வருகின்றார். இந்த படம் எதிர்வரும் மே தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளதென அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் அஜித் படத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கூலி திரைப்படமும் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்திற்கான டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார் அஜித் குமார். தற்போது இது தொடர்பான தகவலை அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் பதிவிட்டுள்ளது.
இதை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்திற்கான டப்பிங் பணிகளை அஜித்குமார் ஆரம்பிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. சமீபத்தில் குட் பேட் அக்லி படத்தில் இருந்து அஜித் குமாரின் இளமையான தோற்றத்தில் வெளியான புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!