• May 17 2024

திடீரென நெஞ்சு வலியால் துடித்த பிரபல தயாரிப்பாளர்- வெளியாகிய அதிர்ச்சி வீடியோ

stella / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல்யமான தயாரிப்பாளராக வலம் வருபவர் தான் தயாரிப்பாளர் தனஞ்சயன். பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களைத் தயாரித்த இவர் தற்பொழுது ரத்தம் என்னும் படத்தை தயாரித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் ஹீரோவாக விஜய் ஆண்டனி நடிப்பதோடு  C.S அமுதன் இப்படத்தை இயக்கவுள்ளார்.இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் மேலும் மஹிமா நம்பியார், நந்திதா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.


இந்நிலையில், இப்படம் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது.இந்த நிலையில்  ப்ரோமோஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.இதில் ரத்தம் படத்திற்கான ஒவ்வொரு ப்ரோமோஷன் விஷயங்களையும் விஜய் ஆண்டனியிடம் தயாரிப்பாளர் தனஞ்சயன் தொடர்ச்சியாக கூறிக்கொண்டே இருக்க வேண்டும்.

 திடீரென அவருக்கு நெஞ்சு வலி வந்து ஆம்புலன்சில் செல்கிறார்.அப்போது கூட படத்தின் ரிலீஸ் தேதியை கூறிவிட்டு தான் செல்கிறார். இதை அழகாக தொகுத்து ப்ரோமோஷன் வீடியோவை வெளியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement