• May 16 2024

8 மில்லியன் பார்வைகளை கடந்த “பத்தல.. பத்தல..” பாடல்..கொண்டாடி வரும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரப்படம் தான் விக்ரம். இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் என பல நட்சத்திர பட்டாளங்களே சேர்ந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் போஸ்ட் புரடெக்க்ஷன் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருவதோடு வருகின்ற ஜுன் -3ஆம் திகதி படம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

மேலும் இப்படத்தின் ப்ரோமோஷனுக்கு பணிகள் சூடுபிடித்துள்ளன அதன்படி இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வரும் 15 ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.

நேற்று முதல் சிங்கிள் பாடலான “பத்தல.. பத்தல..” பாடல் வெளியானது. அரசியல் பகடி வரிகளும் கலந்து வெளியான இந்த பாடல் வைரலாகியுள்ளது.

நேற்று மாலை இந்த பாடல் வெளியான நிலையில் இதுவரை 8.8 மில்லியன் பார்வைகளை கடந்து ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடம்பிடித்துள்ளது.

https://www.youtube.com/embed/HdLp6EOROq0

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement