• May 17 2024

'ராஜபக்ச குடும்பத்திற்கு இது தேவை தான்'-இலங்கை நிலை குறித்து மகிழ்ச்சிப் பதிவினைப் போட்ட பிரபல நடிகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபல்யமான நடிகர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் நம்ம வீட்டுப்பிள்ளை போன்ற திரைப்படங்களில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் நடராஜன். இவர் கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் இலங்கையில் நிகழும் குழப்பங்கள் குறித்து மகிழ்ச்சிகரமான ட்டுவிட் ஒன்றை போட்டுள்ளார். அதாவது இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் புரட்சி வெடித்துள்ளது. இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார்.

மேலும் பல அரசியல்வாதிகளின் வீட்டை மக்கள் தீக்கிரையாக்கியுள்ளனர். இந்த சம்பவங்களை ட்விட்டரில் பதிவிட்டு வரும் தமிழ்நாட்டு மக்கள் பலர் ஈழ போரில் ராஜபக்ச குடும்பம் இழைத்த அநியாயத்திற்கு கிடைத்த கூலி இது என்ற வகையில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள பிரபல தமிழ் ஒளிப்பதிவாளரும், நடிகருமான நடராஜ், இது ராஜபக்ச குடும்பத்திற்கு அவசியமானதுதான் என்ற வகையில் பதிவிட்டுள்ளார். மேலும் பல திரையுலகினரும் ராஜபக்ச ஆட்சியின் வீழ்ச்சி குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பேசி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/HdLp6EOROq0

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement