• Jan 19 2025

ஒருமுறை எடுக்கும் ரிஸ்குக்கு 3 கோடி பெய்மென்ட்... இந்தியாவில் பணக்கார பாடகர் யாரு தெரியுமா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் படங்களில் நடிப்பதன் மூலம் பிரபலமானவர்கள் மட்டுமின்றி இசை, பாடல், நடனம், மிமிக்ரி, காமெடி என தமது தனிப்பட்ட திறமைகளின் அடிப்படையில் பிரபலம் ஆனவர்களும் அதிகம்.

அதன்படி தமிழ் சினிமாவையே கலக்கிய இசைப்புயல் தான் ஏ.ஆர். ரகுமான். இவர் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தான் தற்போது  இவ்வாறான புகழின் உச்சியை அடைந்துள்ளார்.

இந்த நிலையில், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் யார் என பார்த்தால் அது ஏ. ஆர் ரகுமான் தானாம். அவர் கிட்டத்தட்ட 300 கோடி ரூபா வரையில் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்திய சினிமாவில் பிரபலமான பாடல்களுக்கு ஆரம்பத்தில் 300 ரூபாய் தான் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பாடகர்கள் பலரும் லட்சங்களில் தான் சம்பளத்தை வாங்கி வருகிறார்கள். அதிலும் ஒருவர் ஒரு பாடலுக்கு பலகோடி வரைசம்பளம் வாங்கி வருகிறார். அவர் தான் நம்ம ஏ. ஆர் ரகுமான்.

தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என இவரது புகழ் பட்டுத்தொட்டி எங்கும் பறந்து காணப்படுகிறது. இவரது பாடலின் மூலமே பல படங்கள் ஹிட்டானதும் உண்டு. இவர் இசையில் மட்டுமின்றி தற்போது இவரது குரலிலும் பாடல்கள் வெளியாகி ஹிட் ஆகியுள்ளன.

இவ்வாறான நிலையில், ஏ. ஆர் ரகுமான் ஒரு பாடலுக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது இந்தியா பாடகர்கள் வாங்கும் சம்பளத்தை விட பல மடங்கு அதிகம். ஸ்ரேயா கோஷல் கூட 25 லட்சம் தான் சம்பளமாக வாங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement