• May 17 2024

லியோ வெற்றி பெற கோவில் கோவிலாக சென்று தரிசனம்... நிறைவேறுமா இயக்குனரின் வேண்டுதல்...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய், த்ரிஷா மற்றும் முக்கிய பிரபலங்களின் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எதிர் வரும் 19 திகதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் பல பல பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறது லியோ திரைப்படம்.   

திரைப்பட இசை வெளியீட்டு விழா ரத்தாகியதில் இருந்து ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்த லியோ படத்தின் வருகைக்காக ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றார்கள். திரைப்படம் ஓரிரு நாட்களில் திரைக்கு வரவிருக்கும் நிலையில் தற்போது ஏகப்பட்ட பிரச்சினைகள். 19 அன்று படம் வெளியாகுமா என்ற அளவுக்கு சந்தேகமும் எழுந்துள்ளது. 


இந் நிலையில் இங்கு நடைபெறும் பிரச்சினைகள் எல்லாம் தாண்டி 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட லியோ மாபெரும் வெற்றி அடைய வேண்டும் என்று  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ வெற்றிக்காக கோவில் கோவிலாக சென்று மனமுருகி வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான விடீயோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன.

Advertisement

Advertisement