• May 17 2024

தலைவர் 170 படத்தில் அமிதாப் பச்சன் நடிக்கும் கதாப்பாத்திரம் இது தானா?- வெளியாகிய சூப்பர் அப்டேட்

stella / 6 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியாகிய ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்துள்ளது. இதனை அடுத்து இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்து வருகின்றார்.

அனிரூத் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பல வருடங்கள் கழித்து அமிதாப் பச்சன் ரஜினியுடன் இணைந்திருக்கிறார். 


சில நாட்களுக்கு முன்பு தலைவர் 170 படத்தின் ஷூட்டிங்கில் அமிதாப் பச்சன் கலந்துகொண்டபோது அவருடன் ரஜினி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.இந்நிலையில் தலைவர் 170ல் அமிதாப் பச்சனின் ரோல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் சீனியர் வக்கீலாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.


 ஏற்கனவே இந்தப் படத்தில் ரஜினிகாந்த் போலி என்கவுன்ட்டருக்கு எதிராக குரல் கொடுப்பவராக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. தற்போது அமிதாப் வக்கீலாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியிருப்பதால் கண்டிப்பாக இந்தப் படத்தில் கோர்ட் சீன்கள் அதிகம் இருக்குமோ என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement