• May 16 2024

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து முக்கிய நடிகை விலகுகிறாரா? வெளியானது உண்மை..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஹிட்டாக ஓடும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்தச் சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.

இச் சீரியல் வங்காள மொழியில் வெளிவந்த ஸ்ரீமாயி சீரியலின் தமிழ் பதிப்பு என்று கூறப்படுகின்றது. அத்தோடு அப்பாவி பெண்ணின் கணவன் வேறு ஒரு பெண் வீட்டிற்குச் சென்று வருவதால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி இந்த சீரியலின் கதை செல்கிறது.

இவ்வாறு இருக்கையில் இந்த தொடரில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் திவ்யா கணேஷ் நடித்து வருகிறார். இவர் இப்போது விஜய் டிவியிலேயே ஒளிபரப்பாகும் புதிய தொடரான செல்லம்மா சீரியலிலும் நடிக்கிறார்.

எனவே அவர் பாக்கியலட்சுமி முடித்ததும் உடனே செல்லம்மா தொடருக்கு செல்ல வேண்டும். இதனால் பாக்கியலட்சுமி சீரியல் செட்டில் அவரால் தொடர்ந்து இருக்க முடியாது. தொடரில் இனியாவாக நடிக்கும் நேஹா தனது இன்ஸ்டாவில் திவ்யா கணேஷை டாக் செய்து வி மிஸ் யூ அக்கா என பதிவு செய்துள்ளார்.

வி மிஸ் யூ என அந்த வீடியோவில் இடம்பெற்ற புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னது திவ்யா கணேஷ் வெளியேறுகிறாரா என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உண்மையில் அப்படி ஒன்றும் இல்லை படப்பிடிப்பிற்கு செல்வதால் மிஸ் யூ என்று நேஹா பதிவு செய்திருக்கிறார்.

இதோ அந்த புகைப்படம்,

Advertisement

Advertisement