• Apr 17 2026

பட்டுச்சேலையில் சும்மா கும்முன்னு இருக்கீங்க..! கீர்த்தி கல்யாணத்தில் கலக்கிய டிடி..

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் கடந்த 12 ஆம் தேதி கோவாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. குறித்த திருமணத்தில் இரு வீட்டார்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.

கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும்  திரிஷா, இயக்குனர் அட்லீ, அவருடைய மனைவி பிரியா ஆகியோர் கலந்து கொண்டு இருந்தார்கள். இதன்போது விஜயும் திரிஷாவும் ஒன்றாக காரில் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

d_i_a

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நடிகையும் ஆன திவ்யதர்ஷினி கலந்து கொண்டுள்ளார். இதன் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


மேலும் திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டா பதிவில் கீர்த்தி - ஆண்டனி உங்களின் திருமணம் ஸ்மைல் போன்ற மிகவும் அழகாக உள்ளது. மூன்று நாட்கள் கொண்டாட்டமாக இருந்தாலும் ஜோடியாக நீங்க கொடுத்த அன்பு தான் தனித்து தெரிந்தது. நீங்கள் எப்பொழுதும் ஒற்றுமையாக வாழ அனைத்து கடவுளும் உங்களை ஆசீர்வதிக்க வேண்டுகின்றேன் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement