• Aug 23 2025

நீங்க எப்பையும் அழகு தான் மேம்..! நடிகை அபிநயாவின் லேட்டஸ் கிளிக்ஸ்

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் வெளியான Neninthe என்ற படத்தின் மூலம்  நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை அபிநயா. அதன் பின்பு தமிழில் சமுத்திரகனி இயக்கத்தில் வெளியான நாடோடிகள் படத்தில் அறிமுகமானார். இந்த படத்திற்கு  சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது, சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது உட்பட பல விருதுகளை பெற்றார். 

நாடோடி படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பு காரணமாக அபிநயாவிற்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி ஈசன், ஜீனியஸ், ஆயிரத்தில் ஒருவன், வீரம், பூஜை, விழித்திரு, தாக்க தாக்க என பல படங்களில் வரிசையாக நடித்தார். 

கடந்த ஆண்டு அபிநயா நடிப்பில் வெளியான பணி படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பும் கிடைத்தது.  இந்த படம்  ஓடிடியிலும் வெற்றி நடை போட்டது. இவர் சிறுவயதில் இருந்தே காது மற்றும் வாய் பேச   முடியாதவராக காணப்பட்டபோதும் தனது நம்பிக்கை மூலம்  வெற்றி   பெற்றுள்ளார். 


சமீபத்தில் அபிநயா  தன்னுடைய காதல் கணவரை கரம் பிடித்து இருந்தார். சிறுவயது முதல் நண்பராக காணப்பட்டவர் 15 வருடங்களுக்கு மேலாக ரிலேஷன்ஷிப் இல் இருந்ததாகவும்  பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.  இவர்களுடைய திருமணம் சிம்பில் ஆகவே நடைபெற்றது. 

இந்த நிலையில், நடிகை அபிநயா  போட்டோஷூட் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.  காருக்குள் இருந்து அவர எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement