• Aug 23 2025

கதிரின் பேச்சைக் கேட்காமல் பிடிவாதமாக நிற்கும் ராஜி! சுகன்யா மனதை உலுக்கும் பழைய நினைவுகள்

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, சுகன்யா நித்திர கொள்ளாமல் இருக்கிறதைப் பார்த்த பழனி இவள் என்ர குறட்டை சத்தத்தால தான் நித்திர கொள்ளாமல் இருக்கிறாள் என்று ஜோசிக்கிறார். பின் பழனி சுகன்யாவப் பார்த்து நீ வழியில பார்த்த ஆளையே யோசிச்சிட்டு இருக்கியா என்று கேட்கிறார். அதுக்கு சுகன்யா என்னால அவனை ஜோசிக்காமல் இருக்க முடியல என்று சொல்லுறார். 


இதனைத் தொடர்ந்து, கதிர் ராஜியைப் பார்த்து என் மேல இருக்கிற கோபத்தை ஏன் shoe-ல காட்டுற என்று கேட்கிறார். அதுக்கு ராஜி எனக்கெல்லாம் யாருமேலயும் கோபம் இல்ல என்று சொல்லுறார். பின் கதிர் நிமிர்ந்து என்னை பார்த்து பேசச்சொல்லுறார். இதனை அடுத்து ராஜி நான் உனக்கு சப்போர்ட் பண்ண கூடாது என்று சொன்னால் நீயும் எனக்கு சப்போர்ட் பண்ண கூடாது என்று கதிரைப் பார்த்துச் சொல்லுறார். 

அதனைத் தொடர்ந்து கதிர் ராஜியைப் பார்த்து நேற்று மழை பெய்தது இப்ப நீ ஓட எல்லாம் பண்ண வேணாம் என்கிறார். அதைக் கேட்ட ராஜி அப்புடியெல்லாம் இல்ல நான் ஓடத் தான் போறேன் என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார். பின் ராஜி ஓடும் போது தடுமாறி கீழே விழுகிறார். அதைப் பார்த்த கதிர் ஓடிப் போய் தூக்கிவிடுறார். 


இதனை அடுத்து கதிர் ராஜி கிட்ட நீ பிஸ்னஸுக்கு சப்போர்ட் மட்டும் பண்ணு என்கிறார். பின் செந்தில் சம்பளக் காசில என்ன வாங்கலாம் என்று பட்ஜெட் போடுறார். அந்த நேரம் பார்த்து மீனா வந்தவுடனே செந்தில் தான் பட்ஜெட் போட்டதை மறைச்சு வைக்கிறார். அதைப் பார்த்த மீனா நீங்க எழுதினத காட்டுங்க என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement