• May 16 2026

'பள்ளிச்சட்டம்பி' படத்தின் வெளியீட்டு தேதி மாற்றமா? புதிய அறிவிப்பு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'பள்ளிச்சட்டம்பி 'திரைப்படம் தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் 1950களின் கதைக் களத்தில் அமைந்துள்ளது. 

ஐடெண்டிட்டி, நரிவேட்டை மற்றும் லோகா போன்ற வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமடைந்த டொவினோ தாமஸ், இப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில், நடிகை கயாடு லோகர் நாயகியாகவும், விஜயராகவன், சுதீர் கரமானா, பாபுராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசை வழங்கியுள்ளார்.


ஆரம்பத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,  பள்ளிச்சட்டம்பி படத்தின் வெளியீட்டு தேதி ஏப்ரல் 15ஆம் தேதியான மலையாளப் புத்தாண்டு விஷு தினத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement