• Jun 04 2025

தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடும் பிரபலம்...! யார் அந்த பிரபலம் வைரல் ஆகும் பதிவுகள்...!

Roshika / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருபவர் மணிரத்னம் .இன்று தனது 69 வது பிறந்த நாளை கொண்டாடும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இவர் பல திரைபடங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார் .


இவர் "பல்லவி அனு  பல்லவி" என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு காலடி எடுத்தது வைத்துள்ளார் . இவர் பல நட்சத்திரங்களை சினிமா உலகிற்கு அறிமுக படுத்தி வைத்துள்ளார். அதாவது "ஐஸ்வர்யா ராயை" இருவர் படத்தின் மூலமும் "ஏ.ஆர். ரஹ்மானை"  ரோஜா படத்தின்  மூலமும் சினிமாத்துறைக்கு அறிமுகபடுத்தியவர். இவர் பல படங்களை இயக்கி இருந்த போதிலும் "பொன்னியின் செல்வன் 1,2 " திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியிலும்  நல்ல பெயரை பெற்று கொடுத்தது. 


தற்போது "தக் லைஃப்" இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடிப்பதால்  ரசிகர்கள் மத்தியில் நீண்ட எதிர்பார்ப்பில் உள்ளது. இந்த படத்திற்கான புரொமோஷன் வேலைகள் மிக விறுவிறுப்பாக நடை பெற்று வருகின்றது. இந்நிலையில் தனது பிறந்த நாளை கொண்டாடும் மணிரத்தினத்திற்கு ரசிகர்களும் பிரபலங்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருன்றனர்.  அப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 





Advertisement

Advertisement