• Jul 18 2025

விக்ரம் போனதை நம்பவே முடியல.. அடுத்த படம் எடுக்கலாம்னு சொன்னார்.! கதறும் விஜி!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகம் ஒரு புலமை வாய்ந்த இயக்குநரை இழந்துள்ளது. ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மறைந்த செய்தி திரையுலகையே திடுக்கிட வைத்துள்ளது. அவர் மீது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, நடிகை விஜி சந்திரசேகர் சமீபத்தில் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் ஒரு உணர்ச்சி மிகுந்த வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.


அந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்று வருகின்றது. இதில், விக்ரம் சுகுமாரனுடன் அவர் கொண்ட பழக்கம், மதயானைக் கூட்டம் பட அனுபவம், மற்றும் அவரால் தனக்குள் ஏற்பட்ட சினிமா வளர்ச்சி பற்றிய விபரங்களை உணர்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

விக்ரம் சுகுமாரன் இயக்கிய படமான மதயானைக் கூட்டம், 2014-ம் ஆண்டு வெளியானது. விஜி சந்திரசேகர் இதில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்திலிருந்து தான், அவரின் நடிப்பிற்கு புதிய அங்கீகாரம் கிடைத்தது.


“அந்தப் படம் தான் எனக்கு பெரிய பெயர் வாங்கித் தந்தது. அவ்வளவு முக்கியமான படம் அது. திறமையான இயக்குநர், மாறுபட்ட பார்வை கொண்டவர். இரண்டு மாதத்துக்கு முன்னாடி தான் அவரோட போன் வந்துச்சு. அடுத்த படம் தை மாதம் ஆரம்பிக்கணும் அக்கா, நீங்க ரெடியா இருக்கணும் என்றார். அவ்வளவு உற்சாகத்தோடும், உறுதியோடும் சொல்லி இருந்தார்,” என விஜி கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.

விக்ரம் சுகுமாரனின் திடீர் மறைவு, அவரது நண்பர்கள் மற்றும் திரையுலகக் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியாகவே அமைந்துள்ளது. இதை உணர்த்தும் விதமாக விஜி, “இன்னைக்கு இருக்குறவங்க நாளைக்கு இருக்க மாட்டாங்கன்னு சொல்வது ஒரு கருத்து மாதிரி நெனச்சேன். ஆனா இப்ப அதை உணர்ந்திருக்கிறேன். என்னால நம்பவே முடியல.” என்றார். இவ்வாறாக தனது வேதனைகளை சிறப்பாகக் கூறியுள்ளார் நடிகை விஜி.


Advertisement

Advertisement