• Aug 15 2025

முதல் நாளில் யார் வசூல் கிங்?ரஜினி ‘கூலி’ Vs ஹ்ரித்திக்-என்டிஆர் வார் 2!வசூல் விபரம் இதோ!

Roshika / 2 hours ago

Advertisement

Listen News!

சுதந்திர தினத்தையொட்டி கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை நேரத்தையும் பயன்படுத்திக் கொண்டு, கடந்த நாளில் இரண்டு பெரிய படங்கள்  ரஜினிகாந்தின் ‘கூலி’ மற்றும் ஹ்ரித்திக் ரோஷனின் ‘வார் 2’  போட்டியாக திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘வார் 2’, அயன் முகர்ஜி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.


இந்தப் படத்தில் ஹிரித்திக் ரோஷனுடன் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்திருப்பதால், குறிப்பாக தெலுங்கு ரசிகர்களிடையே ஆர்வத்தை அதிகரித்தது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு எதிராக, ஜூனியர் என்டிஆரின் அறிமுகம் படத்தில் 40 நிமிடங்கள் கழித்து  வருகிறது, எனவே ரசிகர்களிடம் சிறிது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் மற்றும் சில ஆக்‌ஷன் காட்சிகள் எதிர்பார்த்த தரத்தில் இல்லையென்றும், சில விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ‘வார் 2’ கலவையான விமர்சனங்களை தான் பெற்றுள்ளது.



வசூல் கணக்குகள் படி, முதல் நாளில் மொத்தமாக ரூ.52.50 கோடி வசூலித்துள்ளது. இதில் ஹிந்தியில் ரூ.29 கோடி மற்றும் தெலுங்கில் ரூ.23 கோடி என பிரிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய காரணமாக, ஒரே நாளில் ரிலீஸான ரஜினியின் ‘கூலி’ படம், ‘வார் 2’-க்கு கடுமையான போட்டியை உருவாக்கியுள்ளது.

அதுபோலவே, 'வார் 2' படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும், முதல் நாளில் எதிர்பார்த்த அளவு வசூல் செய்யவில்லை என்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், தொடரும் விடுமுறை மற்றும் விகேண்ட் கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு, அடுத்த சில நாட்களில் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Advertisement

Advertisement