• Aug 06 2025

அமலாக்கல் துறை அலுவலகத்தில் ஆஜராகிய விஜய் தேவரகொண்டா..! நடந்தது என்ன.?

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

இந்தியாவின் பிரபல திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை (Enforcement Directorate - ED) சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை (Illegal Online Betting Apps) விளம்பரப்படுத்தியதற்காக வழக்குப்பதிவு செய்திருந்தது. இதில் விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ், உட்பட 29 பேர் உள்ளடக்கப்படுகின்றனர்.


சமீபமாக இந்தியாவில் பல்வேறு ஆன்லைன் சூதாட்ட செயலிகள் செயல்பட்டு வருகின்றன. இவை பரந்த அளவில் விளம்பரங்கள் மற்றும் பிரபலங்களின் சமூக ஊடக பக்கங்கள் மூலம் பரப்பப்படுகின்றன. பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள், இந்த செயலிகளை தவறான நம்பிக்கையுடன் பயன்படுத்தி, பெரும் நிதி இழப்புகளை சந்தித்து வருகிறார்கள்.

அத்துடன், இந்த செயலிகள் மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் (Money Laundering) நடந்ததாக பல புகார்கள் எழுந்தன.


இந்த புகார்களின் அடிப்படையில், அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. விசாரணையின் ஒரு பகுதியாக, இந்த செயலிகளுக்கு ஆதரவாக விளம்பரங்களில் நடித்த பல பிரபலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த வழக்கில், தெலுங்கு திரைப்பட நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஆகஸ்ட் 6ம் தேதி (இன்று) ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை அவர் ஐதராபாத் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு உட்பட்டுள்ளார். 

Advertisement

Advertisement