• Apr 17 2026

தீபாவளி தினத்தில் தொழிலாளர்களுக்காக விஷால் செய்த காரியம்-ரசிகர்களிடமிருந்து குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் நடிகர் விஷால் . இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.இப்படத்தில் எஸ்.ஜே சூர்யாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இயக்குநர்  ஹரி இயக்கத்தில் தனது 34வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்றது. இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது படக்குழுவினர் திருச்சியில் நடத்தி வருகின்றனர். 


இதில் நடிகர் விஷால் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி தினமான நேற்றும் விஷால் 34 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் பணியாற்றிய நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு நடிகர் விஷால் சிறப்பு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

விஷால் ஏற்பாடு செய்திருந்த சமபந்தி கறி விருந்தில் ஊழியர்கள் அனைவருடனும் நடிகர் விஷால், இயக்குனர் ஹரி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து கறி விருந்தை சுவைத்தனர்.நடிகர் விஷாலின் இந்த செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன


Advertisement

Advertisement