நடிகர் விஷால், சமீபமாக மேடைகளில் நடந்த சில நிகழ்வுகள் மற்றும் உடல்நிலை பற்றிய கேள்விகளால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய போது கை நடுக்கம் ஏற்பட்டதாலும், பிறகு மயக்கம் ஏற்பட்டு மேடையில் விழுந்ததாலும், விஷாலின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதனை தொடர்ந்து, "விஷால் புராணம்" எனும் ஹாஷ்டேக் சமூக ஊடகங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டது.
இவரது உடல்நிலை குறித்து எழுந்த கேள்விகள் அவரை மனதளவில் பாதித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில், விஷால் தனது 35வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரவி அரசு இயக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியில் இன்று தொடங்கவுள்ளது.
இத்திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்பதுடன், இந்த கூட்டணி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சமீபகாலமாக சர்ச்சைகளின் மையமாக இருந்த விஷால், தற்போது திரைக்கு திரும்பி வருவதாக அறிவித்துள்ள நிலையில், இந்தப் படம் அவருக்கு மீண்டும் வளர்ச்சி பாதையை திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!