• May 16 2026

ஒரே கேரவனுக்குள் சென்ற விக்ரம் - துஷாரா விஜயன்.. சில நிமிடங்களில் நடந்தது என்ன?

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!


விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் ஆகிய இருவரும் ஒரே கேரவனுக்குள் சென்ற நிலையில் சில நிமிடங்களில் நடந்தது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விக்ரம் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வீர தீர சூரன்’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் மூன்று நிமிட முன்னோட்டம் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் விக்ரம் முதலில் கேரவனுக்குள் செல்வது போன்றும், அதன் பின்னர் சில நிமிடங்களில் அதே கேரவனுக்குள் துஷாரா விஜயன் செல்வது போன்றும் பின்னர் இருவரும் ஆச்சரியத்தக்க வகையில் மேக்கப் போட்டு வெளியே வந்த காட்சிகள், பின்னர் படப்பிடிப்பு தொடங்கிய காட்சியும் உள்ளது.

முதல் காட்சியை அசத்தலாக இயக்குனர் அருண்குமார் படமாக்கிய நிலையில்  முதல் காட்சியில் விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் ஆகிய இருவரும் அருகருகே உட்கார்ந்து இருப்பது போன்ற காட்சியை இயக்குனர் அருண்குமார் படமாக்கினார்.

இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதும் ஜிவி பிரகாஷ் இசையில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாக்கி வருகிறது என்பதும் இந்த படத்தை ஹெச்ஆர் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement