• Apr 27 2025

மீனா, ரோகிணி, ஸ்ருதி மூணு பேருக்கும் இதுதான் ஃபர்ஸ்ட் நைட்.. செம்ம ஆட்டம் போட்ட வீடியோ..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, ரோகிணி மற்றும் ஸ்ருதி கேரக்டர்களில் நடிக்கும் கோமதி பிரியா, சல்மா மற்றும் ப்ரீத்தி ரெட்டி ஆகிய மூவரும் ‘கில்லி’ படம் பார்த்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ‘ஃபர்ஸ்ட் நைட் வித் சிறகடிக்க ஆசை கேர்ள்ஸ்’ என்ற கேப்ஷன் பதிவு  செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படம் தற்போது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய், த்ரிஷா நடித்த ‘கில்லி’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பல திரை உலக பிரபலங்களும் பார்த்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதை தெரிந்தது.


இந்த நிலையில் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா கேரக்டரில் நடிக்கும் கோமதி பிரியா, ரோகிணி கேரக்டரில் நடிக்கும் சல்மா மற்றும் ஸ்ருதி கேரக்டரில் நடிக்கும் ப்ரீத்தா ரெட்டி ஆகிய மூவரும் ‘கில்லி’ படத்திற்கு சென்ற வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளனர்.

இந்த படத்தில் இடம்பெற்ற ’அர்ஜுனர் வில்லு’ என்ற பாடல் இடம்பெற்ற போது மூவருமே திரைக்கு அருகில் நின்று கொண்டு போட்ட ஆட்டம் போட்ட வீடியோவை பார்க்கும் போது ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர். குறிப்பாக மீனாவுக்கு இந்த அளவுக்கு டான்ஸ் ஆட தெரியுமா என்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.


Advertisement

Advertisement