• Aug 20 2025

"மாரீசன்" படத்தை மண்ணைக் கவ்வ வைத்த விஜய் சேதுபதி.! வடிவேலு நிலைமை இப்டி ஆகிடுச்சே..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

சின்னத்திரை உலகில் பல மெகா சீரியல்களை இயக்கி வந்த இயக்குநர் சுதீஷ் சங்கர் தனது புதிய முயற்சியாக 'மாரீசன்' என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் வடிவேலு, பகத் ஃபாசில், கோவை சரளா, மொட்ட ராஜேந்திரன், மனோபாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். காமெடி, ஆக்‌ஷன் கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக 'மாரீசன்' கருதப்பட்டது.


'மாரீசன்' கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 25) வெளியானது. முதல் நாளில் இப்படம் தமிழ்நாடு முழுவதும் ரூ.75 லட்சங்கள் வசூல் செய்திருந்தது. இது, இப்படத்தின் எதிர்பார்ப்பு மற்றும் கதாநாயகர்களின் பிரபலத்தைப் பொருத்தவரையில் சிறிது பின் தங்கியதாகவே பார்க்கப்படுகிறது. தற்பொழுது 3 நாட்களில் இப்படம் 3.33 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதே தினத்தில் வெளியான மற்றொரு திரைப்படம், 'தலைவன் தலைவி'. இதில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்துள்ளனர். திரைக்கதையில் காதல், அரசியல், சமூக பின்னணி கலந்ததாக வந்திருந்த இப்படம், விமர்சகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது.


வசூல் விவரங்களில், 'தலைவன் தலைவி' திரைப்படம் மாரீசனை விட பல மடங்கு வசூலித்து தங்கள் சாதனையை நிலைநாட்டியுள்ளது. மூன்று நாட்களில் இதுவரை 20 கோடி ரூபாயை தாண்டியுள்ளது என்றே கூறப்படுகிறது.

Advertisement

Advertisement