• Aug 10 2025

கிங்காங் குடும்பம் விஜய் சேதுபதியை சந்தித்த தருணம்...! இணையத்தை கலக்கும் வீடியோ...!

Roshika / 1 hour ago

Advertisement

Listen News!

பிரபல காமெடி நடிகர் கிங்காங் தனது மகள் கீர்த்தனாவின் திருமணத்தை சென்னையில் விமர்சையாக நடத்தினார். திரையுலகில் கிங்காங் என்ற கதாபாத்திரத்தின் மூலம் புகழ்பெற்ற இவர், கலா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.


சமீபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினார். அவரின் வருகை விழாவுக்கு சிறப்பை கூட்டியது. இதனையடுத்து, நடிகர் சிவகார்த்திகேயன் கிங்காங் இல்லத்துக்கு நேரில் சென்று, மணமக்களுக்கு சர்ப்ரைஸ் அளித்து, தனது அன்பையும் ஆசீர்வாதத்தையும் பகிர்ந்தார்.


மேலும், நடிகர் கிங்காங் தனது மகள் கீர்த்தனா மற்றும் மருமகனுடன் நடிகர் விஜய் சேதுபதியின் அலுவலகத்துக்கு நேரில் சென்று வாழ்த்து பெற்றுள்ளார். விஜய் சேதுபதி அவர்களையும் அன்புடன் வரவேற்று, மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த உணர்வுபூர்வமான தருணத்தின் வீடியோவை நடிகர் கிங்காங் தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்வுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.




Advertisement

Advertisement