ஒவ்வொரு வாரமும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் டிஆர்பி (TRP) ரேட்டிங் அன்பர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 2025 ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் வெளிவந்த டிஆர்பி ரேட்டிங் பட்டியலில் எந்த சீரியல்கள் முன்னணியில் உள்ளன என்பதை இப்போது பார்ப்போம்.
பிரக்னன்சி மர்மத்தைச் சுற்றி கதைக்களம் திரும்பும் வகையில், ஆனந்திக்கு ஆதரவாக அன்பு தொடர்ந்து துணையாக இருக்கிறார். ஆனால், இப்போது வரை சப்போர்ட் செய்த துளசி, வில்லியாக மாறி அவர்களைப் பிரிக்க திட்டமிடுகிறாள். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, ‘சிங்கப் பெண்ணே’ தொடரை -10.18 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் அமர்த்தியுள்ளது.
வரலட்சுமி பூஜையைக் கொண்ட சீரியஸ் ட்ராமா முற்றுப்புள்ளி விடாமல் தொடரும் இந்த கதையில், சுந்தரவல்லியின் திட்டத்தை தோற்கடித்து, சூர்யா நந்தினிக்கு தாலி கட்டும் சூழ்நிலை ரசிகர்களை தீவிரமாக ஈர்த்துள்ளது. இந்த நிலையில் மூன்று முடிச்சு தொடர் 9.46 புள்ளிகள் பெற்று இரண்டாவது பெற்றுள்ளது.
மூர்த்தியின் மர்மமான கேரக்டருக்கு மாற்று நடிகர் அறிமுகமாகி, தொடரின் கதையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளார். இதனால் தொடரை தொடர்ந்து பார்க்கும் ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.மேலும் கயல் – 8.88 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
ஜனனி, ஈஸ்வரியின் நிலைக்கு காரணமானவரை கண்டுபிடிக்க முயற்சிக்க, குணசேகரன் அவளுக்கு மீதான பழியை உருவாக்க முயற்சி செய்வது கதையில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் எதிர்நீச்சல் 2 தொடர் 8.81 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தை பிடித்துள்ளது
ரோகிணியைச் சுற்றி உருவான மர்மம் நீங்கியதால், தற்போது சீரியல் கொஞ்சம் மந்தமாக போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் பிரைம் டைம் ஸ்லாட்டில் ஒளிபரப்பாகுவதால், இடத்தைப் பேணிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சிறகடிக்கும் ஆசை சீரியல் 8.46 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
நடிப்பிலும் கதையிலும் எதார்த்தம் அதிகமாக இருப்பதாலும், பெரிய அளவிலான நெகடிவ் காட்சிகள் இல்லாததாலும் ‘அய்யனார் துணை’ தொடர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது.மேலும் அய்யனார் துணை – 8.12 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் “சிங்கப் பெண்ணே” முன்னணியில் களமிறங்கி, அதனைத் தொடர்ந்து “மூன்று முடிச்சு” மற்றும் “கயல்” இடங்களை பிடித்துள்ளன. சின்னத்திரை ரசிகர்கள் எந்த தொடரை அதிகம் பார்கிறார்கள் என்பதற்கான தெளிவான பதிலை இந்த டிஆர்பி ரேட்டிங் நமக்குக் காட்டுகிறது. அடுத்த வாரம் எந்த சீரியல் முதலிடம் பிடிக்கப் போகிறது என்பதற்கான எதிர்பார்ப்பு தற்போது எழுந்துவிட்டது.
Listen News!