• May 16 2026

கருப்பு பணம் இல்ல நான் வெயிலில் நின்று கருத்த பணம்! kpy பாலா உருக்கம்

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் பாலா. தொடர்ந்த பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வந்த இவர் மிகவும் பிரபலமானது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஆகும்.


இவ்வாறு பிரபலமான இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பதோடு உழைக்கும் பணத்தை வைத்து பல மக்களுக்கு உதவி செய்தும் வருகின்றார். அவ்வாறு சமீபத்தில் இளைஞன் ஒருவருக்கு பைக் வாங்கிக்கொடுத்து , கண் பார்வை அற்ற சிறுவனின் சிகிச்சைக்கு பணம் கொடுத்தது என பல விடயங்களை செய்து கலியுக கர்ணன் என பெயர் வாங்கியுள்ளார்.


இவ்வாறு இருக்கும் இவர் செய்யும் உதவிகளை விமர்சிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் அவ்வாறே இவர் உதவி செய்யும் பணம் அனைத்தும் ஒரு சிலரின் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றவே இவ்வாறு செய்கிறார் என கூறப்படுகின்றது. இது குறித்து  கேட்ட போது நான் எவர் பணத்தையும் எடுக்கவில்லை , இது கருப்பு பணம் இல்லை நான் வெயிலில் நின்று கருத்து சம்பாதித்த பணம் என விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

Advertisement

Advertisement