• Jun 06 2025

மீண்டும் இணையும் கூட்டணி...! மாரீசன் படத்தின் டீசர் இன்று வெளியீடு...!

Roshika / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக  வலம் வருபவர்கள் வடிவேலு மற்றும் பகத் பாசில்  இவர்கள் நடிப்பில் வெளியான "மாமன்னன்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது இவர்கள்  நடிப்பில் "மாரீசன்" திரைப்படம் தயாராகி வருகின்ற  நிலையில் படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.


சுதீஷ் சங்கர் இயக்கத்தில் பகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் இந்த திரைப்படத்திற்கான ரிலீஸ் திகதி அறிவிப்பு  நல்ல ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது . இப்படத்திற்கு யுவன் சங்கர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் வி.கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், எழுதி, துணை இயக்குனராக பணியாற்றியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.  

இந்த படத்தின் கதைக்களம் " இரு நபர்களுக்கு இடையே நடைபெறும் சாலை பயணத்தை" மையமாகக் கொண்டு அமைக்கபட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு  வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகின்றது. இத் தகவல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று  வருவதுடன் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement