• Apr 17 2026

எழிலுக்கு கோபி சொன்ன முக்கிய விஷயம்,கதறி கதறி அழும் பாக்கியா, இனியா எடுத்த முடிவு- Baakiyalakshmi Serial

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அமிர்தா வீட்டுக்குள் நின்று அழுது கொண்டிருப்பதைப் பார்த்து பாக்கியா சென்று ஆறுதல்ப்படுத்துகின்றார்.அப்போது அமிர்தா இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கல அம்மா என்று அழ ராதிகாவும் வந்து, இப்படியே அழுது கொண்டிருப்பதால் எதுவும் ஆகாது அமிர்தா என புத்திமதி சொல்கின்றார்.


தொடர்ந்து ஈஸ்வரி செழியன் மற்றும் எழிலுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டு உங்க இரண்டு பேரோடை வாழ்க்கையும் இப்படிப் போச்சே என்று புலம்ப கோபி ஆறுதல் சொல்லுவதோடு,எழிலிடம் அமிர்தாவும் நீயும் ஸ்ரோங்காக இருந்தால் இந்த பிரச்சினைக்கு முடிவு கொண்டு வரலாம் என அட்வைஸ்ட் பண்ணுகின்றார்.

அத்தோடு எல்லோரும் உனக்காக இருப்பாங்க சொல்கின்றார். மறுபுறம் இனியா ஜெனியைப் பார்ப்பதற்காகப் போகின்றார். அங்கே சென்று குழந்தையைக் கொஞ்சுவதோடு, ஜெனியிடம் எப்போ வீட்டுககு வருவீங்க என்று விசாரிக்கின்றார். ஆனால் ஜெனி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கின்றார்.


தொடர்ந்து ஜெனியை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்து விட, வீட்டுக்கு வரும் இனியா ஜெனியைப் பார்க்கப் போன விஷயத்தையும் சொல்கின்றார்.அப்போது செல்வி அமிர்தாவுக்காக வீட்டில் நடந்த பிரச்சினையை சொல்ல இனியா பதறிப்போய் அமிர்தாவைப் பார்க்க போகின்றார். அப்போது பாக்கியா நடந்ததை நினைத்து கதறி அழுகின்றார். இத்துடன் இன்றை எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement