• May 15 2026

என் அப்பா தோன்றியதும் அரங்கம் ஒலித்தது! ஸ்டார் பட இயக்குனர் எலன் உருக்கம்!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதும் அதன் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தங்களது கருத்துக்களை கூறுவார்கள். அவ்வாறே சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போடும் ஸ்டார் திரைப்படத்தின் இயக்குனர் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். 


நடிகர் பாண்டியனின் மகனான இயக்குனர் எலன் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஸ்டார் ஆகும். இந்த திரைப்படத்தை ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி வருவதை நேரில் சென்று பார்த்த இயக்குனர் உருக்கமாக சில வார்த்தைகள் கூறியுள்ளார்.


அவர் கூறுகையில் “ஸ்டார் படத்தில் என் அப்பா தோன்றியபோது அரங்கம் அதிர ஒலித்த கைத்தட்டலால் இன்றைய நாள் எனக்கு சிறப்பாக அமைந்தது. என் வாழ்வில் எப்போதும் இது எனக்கு சிறந்த தருணமாக இருக்கும். அவரின் நீண்டநாள் கனவு நிறைவேறியுள்ளது” என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement