தமிழில் ‘தரமணி’, ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ போன்ற விமர்சன ரீதியான வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் ராம் தற்போது ‘பறந்து போ’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, மலையாள நடிகர் அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இது அஜுவின் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா வழங்கியுள்ளார். இப்படம் ஜூலை 4ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் முதல் பாடலாக வெளியான “சன்ஃப்ளவர்” ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் சித்தார்த் பாடிய “டாடி ரொம்ப பாவம்” எனும் இரண்டாவது பாடல் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. பாடல் வெளியாகி குறித்த மணிநேரத்தில் அதிக பார்வையாளர்களை பெற்று வைரலாகியுள்ளது.மேலும் இந்த படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Listen News!