• Aug 09 2025

தல அஜித்தின் ஆசீர்வாதம் கேட்ட ஷாலினி..!வைரலாகும் குடும்ப நிகழ்வு புகைப்படங்கள்..!

Roshika / 1 hour ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் குமார், சமீபத்தில்  நடைபெற்ற ஒரு குடும்ப பூஜையில் தனது மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்டார். இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.


மேலும் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த வெற்றி ஜோடிகள். அவர்கள் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தபோதே இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது .


தற்போது பரவி வரும் புகைப்படத்தில், அஜித் தனது மனைவியான ஷாலினிக்கு திருநீற்றைப் பொட்டாக அணிவித்து ஆசீர்வதிக்கும் காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவரது எளிமையும், மனைவியிடம் காட்டும் அன்பும் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


மேலும், ஷாலினி தனது கணவரான அஜித்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் வீடியோவும் வைரலாகி வருகிறது. இந்த நெகிழ்ச்சிகரமான தருணங்களைப் பார்த்த ரசிகர்கள் தங்களது உணர்ச்சிகரமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


தல அஜித்தின் தனிமனித வாழ்வில் கூட அவரது நேர்மை, பணிவு மற்றும் பாசம் பிரதிபலிக்கின்றது என அவரது ரசிகர்கள் பெருமிதத்துடன் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement