• Aug 09 2025

சரோஜா தேவி பெரிய டான்ஸர் கிடையாது... ஆனா.. ஒய்.ஜி. மகேந்திரனின் அதிரடிக் கருத்து வைரல்.!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பொன்னான காலத்தில் ராணியாகத் திகழ்ந்தவர் நடிகை சரோஜா தேவி. நவீன தமிழ் சினிமாவில் அவரின் அழகு, மென்மை, முகபாவனைகள் என அனைத்தும் பேசப்படுகின்றன. இந்நிலையில், பழம்பெரும் நடிகரும் நகைச்சுவை வேடங்களில் தனி அடையாளம் பதித்தவருமான ஒய்.ஜி. மகேந்திரன், சமீபத்திய நேர்காணலில், சரோஜா தேவி பற்றிய சுவாரஸ்யமான கருத்தை வெளியிட்டுள்ளார்.


அதன்போது, “சரோஜா தேவி அம்மா ஒன்னும் பெரிய டான்ஸர் கிடையாது. ஆனா, அவங்களுடைய முகபாவனைகளுக்காக தான் அவங்களுக்கு "அபிநய சரஸ்வதி" என்று பெயர் வந்தது. டான்ஸ் என்பது வேறு. அபிநயம் என்பது வேறு." எனத் தெரிவித்திருந்தார். 


ஒய்.ஜி. மகேந்திரன் கூறிய கருத்து விமர்சனமாக அல்லாது நேர்மையான கலையுணர்ச்சியுடனான பார்வையாகவே பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி குறித்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதுடன், பலரும் இதனை விமர்சித்துவருகின்றனர்.


Advertisement

Advertisement