• Apr 27 2025

பியூட்டி பக்கத்தில இப்படி ஒரு டர்ட்டியா? பிரபாஸ் - திஷா பதானி லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

’கல்கி 2898ஏடி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் இத்தாலியில் நடந்த நிலையில் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நடிகை திஷா பதானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் இதை பார்த்து திஷா பதானிவை வர்ணித்த நிலையில், பிரபாஸை உருவ கேலி செய்து கமெண்ட்களை பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் க’கல்கி 2898ஏடி’. சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இத்தாலி நாட்டில் படப்பிடிப்பு நடைபெற்றது. 

இந்த படப்பிடிப்பில் பிரபாஸ் மற்றும் திஷா பதானி கலந்து கொண்ட நிலையில் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சற்று முன் திஷா பதானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், பிரபாஸ் தோற்றத்தை பார்த்து உருவ கேலி செய்து வருகின்றனர். பியூட்டி பக்கத்தில் ஒரு டர்ட்டியா? உள்பட பல்வேறு கமெண்ட்கள் பதிவாகி வருகிறது என்பதும் அதற்கு பிரபாஸ் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே பிரபாஸ் நடித்த ’சலார்’ உள்பட ஒரு சில படங்களில் அவருடைய தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் கேலியும் கிண்டலும் செய்த நிலையில், அது இந்த படத்திலும் தொடர்கிறது. இருப்பினும் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இத்தாலியின் அழகை எடுத்துக்காட்டும் வகையில் இருப்பதால் இவை வைரல் ஆகி வருகின்றன.



Advertisement

Advertisement