• Apr 27 2025

படிச்சது இஞ்சினியரிங்.. செய்யுற வேலை நியூஸ் ரீடிங்: ஜிவி பிரகாஷின் ‘டியர்’ டீசர்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முதலாக ஜோடியாக நடித்த ‘டியர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் டிரைலரில் இன்ஜினியரிங் படித்த ஜிவி பிரகாஷ், செல்லமான பெற்றோருக்கு வளர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷை திருமணம் செய்து கொள்கிறார். இந்த திருமணமே சில பொய்கள் கூறி நடந்ததாக தெரியும் நிலையில் பர்ஸ்ட் நைட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் குறட்டை விடும் பழக்கம் உடையவர் என்று ஜிவி பிரகாஷ்க்கு தெரிய வருகிறது..

ஐஸ்வர்யா ராஜேஷ் குறட்டையை தாங்க முடியாமல் ஜிவி பிரகாஷ்  தவிக்க இதனால் கணவன் மனைவிக்கு ஏற்படும் பிரச்சனை, அதன் விளைவுகள் என்ன? என்பதுதான் இந்த படத்தின் கதை என டிரைலரில் இருந்து  தெரிய   வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் ஜோடி பொருத்தம் இல்லாமல் இருப்பதாக இந்த ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது. குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஜிவி பிரகாஷுக்கு அக்கா போல் இருக்கிறார். அது மட்டுமின்றி குறட்டையை மையமாக வைத்து ’குட் நைட்’ என்ற திரைப்படம் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதே டைப்பில் இன்னொரு கதை என்பது ஒவ்வொரு காட்சியை பார்க்கும் போதும் ’குட் நைட்’ படம் தான் ஞாபகம் வருகிறது. இருப்பினும் ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தை வெற்றி படமாக்குவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement