• Jun 20 2025

சிறந்த கதைக்கான விகடன் விருது பெற்ற "நந்தன்" திரைப்படம்..!இயக்குநரின் எக்ஸ் தளபதிவு..!

Roshika / 3 hours ago

Advertisement

Listen News!

இயக்குநர் இரா. சரவணனின் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் "நந்தன்" இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இத் திரைப்படத்தில் சசிகுமார் மற்றும் ஸ்ருதி  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். தற்போது இந்த படத்திற்கு விகடன் விருது ஒன்று கிடைத்துள்ளதாக இயக்குநர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


மேலும் இந்த படத்தில் சமூக நீதி, சாதிக் கொடுமைகள் பற்றிய கதையைச் சொல்கிறது. திரைப்படத்தின் படைப்பு மற்றும் நடிகர் சசிகுமாரின் பங்களிப்புக்காக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்று இருந்தது. இந்நிலையில் "நந்தன்" திரைப்படம், சமூகத்தில் நடக்கும் சாதிய கொடுமைகளையும், தாழ்த்தப்பட்டோர் மீதான அடக்கு முறை பற்றியும் கூறி இருந்தது. மேலும் இயக்குநர் இரா. சரவணன் இந்த பிரச்சனையை ஆவணப்படம் போல் காட்சிப்படுத்தி இருந்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. 


மேலும் இந்த திரைப்படத்திற்கு ஆனந்த விகடன் கிடைத்துள்ளதாக இயக்குநர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது  சினிமா விருதுகளில் சிறந்த கதைக்கான விருது கிடைத்துள்ளது. சிறந்த கதைக்கான அங்கீகாரத்தை "நந்தன்" திரைப்படம் பெற்றுள்ளதாகவும் அந்த விருதை என்னுயிர் நண்பன் வினோத் கையால் பெற்றது கூடுதல் கொடுப்பினை என்று பதிவிட்டதுடன்  விகடனுக்கு நன்றி  நண்பனுக்குப் புன்னகை என்பது போல பதிவிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.





Advertisement

Advertisement