• May 17 2025

ஞானத்தை வைத்து குணசேகரனை அசிங்கப்படுத்திய நந்தினி! மீண்டும் வந்த கரிகாலன்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், கரிகாலன் கூட்டாளியுடன் குணசேகரனைத் தேடி வீட்டுக்கு வருகிறார். அவரைப் பார்த்து ஷாக்கான எல்லாரும் ஞானத்தை ஏமாற்றி பணத்தைச் பறிக்க பிளான் கொடுத்தது குணசேகரனின் திட்டம் என்று பேசிக் கொள்கின்றார்கள்.

இது குணசேகரனின் காதுக்கு வர, வீட்டில் உள்ள அனைவரையும் வரச் சொல்லி இதைப் பற்றி பேசுகிறார் குணசேகரன். அதில் நான் என்னமோ கரிகாலனை அனுப்பி உங்க  பணத்தை பறிக்க சொன்ன மாதிரி நீங்க எல்லாரும் கேக்குறீங்கலாமே எனக் கேட்க, அனைவரும் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருக்கின்றார்கள்.


இதன் போது முதல் பத்திரிகையை ஞானத்தை அழைத்துக் கொடுத்த நந்தினி, இந்த வீட்டில அவருக்கு அடுத்தது நீங்க தானே படித்து சரியா இருக்கான்னு பாருங்க என கொடுக்க, ஞானம் கண் கலங்கி பத்திரிகையை வாங்கி பார்க்கிறார். மேலும் அவனுக்கு கொடுக்க என்கிட்ட எதுவுமே இல்லையே என்று சக்தியிடம் வேதனைப்பட்டு அழுகிறார்.

அவர் பேசுவதைக் கேட்டு கிச்சனில் இருந்த ரேணுகாவும்  கண்கலங்கி அழுகிறார். இதன்போது எல்லாரும் ஒற்றுமையா இருந்தாலே எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று சக்தி ஞானத்தை சமாதானம் செய்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்கான ப்ரோமோ.

Advertisement

Advertisement