• May 16 2026

ரொமான்ஸில் புகுந்து விளையாடும் முத்து.! மனோஜ்க்கு ரூட் கிளியர் ஆகிட்டே..! டுடே எபிசோட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில், பொய் ஜோசியக்காரி சொன்னவற்றை நம்பி விஜயா தலை குனிந்து நிற்கின்றார். அதற்கு பின்பு முத்து அவரை போலீசில் பிடித்து கொடுக்கின்றார்.

பின்பு விஜயா மீனாவை ஆர்த்தி அடுத்து உள்ளே அழைக்கின்றார். இதன்போது அண்ணாமலை மீனாவின் குடும்பத்தை மறுநாள் மதியத்திற்கு வருமாறு அழைக்கின்றார். மீனா மீண்டும் வந்ததால் அதனை விருந்து வைத்துக் கொண்டாட வேண்டும் என்று சொல்கின்றார்.

இதைத் தொடர்ந்து வீட்டுக்கு சென்ற அருணிடம் சீதா தாலியை காட்டி, "இதற்காகத்தானே என்னை வெளியே அனுப்பிட்டீங்க" என்று பேச, "அம்மா இல்லாததால் நான் என்ன பண்ணுவது என்று தெரியாமல் பேசிவிட்டேன்" என்று கூறுகின்றார்.


எனினும் "உன்னுடைய அம்மா போனால்தான் உனக்கு அந்த வலி புரியும்" என்று சொல்ல, சீதா அதிர்ச்சி அடைகின்றார். மேலும் "இது எல்லாம் டென்ஷன்  தலைவலியினால் வரும் டிரஸ்தான்.  ஒருமுறை டாக்டரை சந்தித்துவிட்டு வரலாம்" என்று கூற, "அப்படி என்றால் என்னை பைத்தியம் என்று சொல்கின்றாயா?" என சீதாவுடன் எமோஷனலாக நடந்துகொள்கின்றார்.

இன்னொரு பக்கம் மனோஜுக்கு ஜீவா பெண் பார்க்கின்றார். அவருடைய பெயர் ஜமுனா. இதை அறிந்த மனோஜ் உடனே பெயரை வைத்து பொருத்தம் பார்க்கின்றார். அதற்கு பின்பு ஜமுனா ஷோரூமுக்கு வருகின்றார்.

அவர் உடனே "என்னை பிடித்திருக்கிறதா?" என்று கேட்க, மனோஜும் ஆம் என்று சொல்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement